Sunday, December 25, 2011

‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ தொடக்கவிழா









































பாரதிராஜாவின் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தொடக்க விழா தேனி, அல்லி நகரம்,, வீரப்ப அய்யனார் கோயிலில் .பசுமை நிறைந்த மலைகள் சூழ்ந்திருக்கும் லொகேஷனில் நடைபெற்றது.
மணிரத்னம். பாலச்சந்தர், பாலுமகேந்திரா ஆகியோர் முன்னிலையில் கடா வெட்டி விழா நடந்தது. சென்னையிலிருந்து நட்சத்திர பட்டாளங்களும் கலந்துகொண்டனர். அல்லி நகரத்திலிருந்து விழா நடக்கும் வீரப்ப அய்யனார் கோயில் வரை பேனர்களும் கடவுட்டுக்களும் அமர்க்களப்படுத்தப்பட்டிருந்தது.
நடிகர், நடிகைகளுக்கு நிகராக கவிஞர் வைரமுத்துவுக்கும் அவரது சமூக இலக்கிய பேரவை பிரமாண்ட பேனர்கள் வைத்து வரவேற்பு கொடுத்தது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுவது,, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
by tamilnews

0 comments:

Post a Comment